புதுக்கோட்டை மாவட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி உள்பட 91 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.
புதுக்கோட்டை தொகுதி
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, ஆலங்குடி, திருமயம், அறந்தாங்கி, கந்தர்வகோட்டை (தனி) மற்றும் விராலிமலை ஆகிய 6 தொகுதிகளிலும் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜனதா, காங்கிரஸ் மற்றும் த.வெ.க. ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களை தவிர போட்டியிட்ட 109 வேட்பாளர்களில் 91 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர். அதிர்ச்சிகரமாக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் 6 தொகுதிகளிலும் தங்கள் டெபாசிட்டை பறிகொடுத்துள்ளனர்.
இதில் புதுக்கோட்டை தொகுதியில் தி.மு.க., பா.ஜனதா, த.வெ.க., நாம் தமிழர் உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 30 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் முத்துராஜா வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆகிறார். மீதமுள்ள வேட்பாளர்களில் பா.ஜனதா வேட்பாளர் ராமச்சந்திரன் மற்றும் த.வெ.க. வேட்பாளர் ஷெரிப் ஆகிய 2 பேர் மட்டுமே தங்களது டெபாசிட்டை தக்க வைத்துள்ளனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எழிலரசி, பிற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 27 பேர் தங்களது டெபாசிட்டை இழந்தனர்.
ஆலங்குடி தொகுதி
ஆலங்குடி தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 14 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் மெய்யநாதன் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆகிறார். மீதமுள்ள வேட்பாளர்களில் அ.தி.மு.க. வேட்பாளர் தன-விமல் மற்றும் த.வெ.க. வேட்பாளர் கந்தசாமி ஆகிய 2 பேர் மட்டுமே தங்களது டெபாசிட்டை தக்க வைத்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜாராமன், பிற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 11 பேர் தங்களது டெபாசிட்டை இழந்தனர்.
திருமயம்
திருமயத்தில் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 14 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ரகுபதி வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆகிறார். மீதமுள்ள வேட்பாளர்களில் அ.தி.மு.க வேட்பாளர் வைரமுத்து மற்றும் த.வெ.க. வேட்பாளர் சிந்தாமணி ஆகிய 2 பேர் மட்டுமே தங்களது டெபாசிட்டை தக்க வைத்துள்ளனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் லட்சுமி சீனிவாசன், பிற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 11 பேர் தங்களது டெபாசிட்டை இழந்தனர்.
அறந்தாங்கி
அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் த.வெ.க., காங்கிரஸ், பா.ஜனதா, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், த.வெ.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் முகமது பர்வேஸ் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆகிறார். மீதமுள்ள வேட்பாளர்களில் காங்கிரஸ் வேட்பாளர் ராமச்சந்திரன் மற்றும் பா.ஜனதா வேட்பாளர் கவிதா ஸ்ரீகாந்த் ஆகிய 2 பேர் மட்டுமே தங்களது டெபாசிட்டை தக்க வைத்துள்ளனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் முத்துலட்சுமி, பிற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 12 பேர் தங்களது டெபாசிட்டை இழந்தனர்.
விராலிமலை
விராலிமலை சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க., த.வெ.க. தி.மு.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 26 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் விஜயபாஸ்கர் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆகிறார்.
மீதமுள்ள வேட்பாளர்களில் த.வெ.க. வேட்பாளர் முருகேசன் மற்றும் தி.மு.க. வேட்பாளர் செல்லபாண்டின் ஆகிய 2 பேர் மட்டுமே தங்களது டெபாசிட்டை தக்க வைத்துள்ளனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யலட்சுமி, பிற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 23 பேர் தங்களது டெபாசிட்டை இழந்தனர்.
கந்தர்வகோட்டை
கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதியில் த.வெ.க. பா.ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 10 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், த.வெ.க. சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சுப்பிரமணியன் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆகிறார். மீதமுள்ள வேட்பாளர்களில் பா.ஜனதா வேட்பாளர் உதயகுமார் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் சின்னதுரை ஆகிய 2 பேர் மட்டுமே தங்களது டெபாசிட்டை தக்க வைத்துள்ளனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நதியா, பிற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 7 பேர் தங்களது டெபாசிட்டை இழந்தனர். குறிப்பாக 6 சட்டமன்ற தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட்டை இழந்துள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.