புதுக்கோட்டை மாவட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் நோட்டாவிடம் 77 வேட்பாளர்கள் தோற்றுள்ளனர்.




புதுக்கோட்டை மாவட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் நோட்டாவிடம் 77 வேட்பாளர்கள் தோற்றுள்ளனர்.

77 வேட்பாளர்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி, புதுக்கோட்டை, திருமயம், அறந்தாங்கி, கந்தர்வகோட்டை (தனி), விராலிமலை தொகுதிகளில் மொத்தம் 109 பேர் போட்டியிட்டனர். இதில் 77 பேர் நோட்டாவில் பதிவான வாக்குகளை விட குறைந்த வாக்குகள் பெற்றுள்ளனர். இதில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 467 வாக்குகள் நோட்டாவில் பதிவானது. இதில் த.வா.க., புதிய தமிழகம், மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர்களும் என மொத்தம் 24 பேர் நோட்டாவை விட குறைந்த வாக்குகள் பெற்றிருந்தனர்.

இதேபோல் ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் நோட்டாவில் 673 வாக்குகள் பதிவானது. ஆனால் நோட்டாவை விட சசிகலாவின் அ.இ.பு.த.ம.மு.க., உள்பட 10 சுயேச்சை வேட்பாளர்கள் குறைந்த வாக்குகளை பெற்றிருந்தனர். திருமயம் சட்டமன்ற தொகுதியில் 945 வாக்குகள் நோட்டாவில் பதிவானது. நோட்டாவில் பதிவான வாக்குகளை விட குறைந்த வாக்குகளை பெற்ற புதிய தமிழகம் கட்சி, சசிகலாவின் அ.இ.பு.த.ம.மு.க., உள்பட சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 10 பேர் நோட்டாவை விட குறைந்த வாக்குகள் பெற்றிருந்தனர்.

குறைந்த வாக்குகள்

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் 945 வாக்குகள் நோட்டாவில் பதிவானது. இதில் புதிய தமிழகம் கட்சி உள்பட போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 10 பேர் நோட்டாவை விட குறைந்த வாக்குகள் பெற்றிருந்தனர்.

விராலிமலை தொகுதியில் 375 வாக்குகள் நோட்டாவில் பதிவானது. இதில் புதிய தமிழகம் கட்சி உள்பட போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 8 பேர் நோட்டாவை விட குறைந்த வாக்குகள் பெற்றிருந்தனர். கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதியில் 1,127 வாக்குகள் நோட்டாவில் பதிவானது. இதில் சுயேச்சை வேட்பாளர் என மொத்தம் 6 பேர் நோட்டாவை விட குறைந்த வாக்குகள் பெற்றிருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments