வானிலை ஆய்வு மையத்தால் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மிக கன மழைக்கான ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கனமழையை எதிர்கொள்ளும் விதமாக அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடத்தப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு அனைத்து துறை அலுவலர்களும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் சார்பில் பேரிடர் கால நடவடிக்கை எடுக்கும் பொருட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் செயல்பட்டுக்கொண்டிருக்கும் கட்டணமில்லா அழைப்பு எண் -1077, தொலைபேசி எண் -04322--222207 மற்றும் வாட்ஸ்-அப் எண் 70923 00029 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.