ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களை அதிக விலையுள்ள ரீசார்ஜ் திட்டங்களை தேர்ந்தெடுக்குமாறு கட்டாயப்படுத்துவதாகக் கூறி, புதுக்கோட்டை மாவட்ட செல்போன் விற்பனையாளர் நல சங்கம் (PMDA) கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
சமீபகாலமாக ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் ₹349 திட்டத்தில் மட்டுமே ரீசார்ஜ் செய்ய வேண்டும் என மறைமுகமாகக் கட்டாயப்படுத்தி வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. அதே சமயம், குறைந்த விலையிலான ₹299 திட்டம் பயன்பாட்டில் இருந்தும், அதனை வாடிக்கையாளர்கள் பெற முடியாதவாறு நிறுவனம் தடுப்பதாக விற்பனையாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
கண்டன அறிக்கை
இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட செல்போன் விற்பனையாளர் நல சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, வாடிக்கையாளர்களுக்கு விருப்பமான திட்டங்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை ஜியோ நிறுவனம் பறிக்க முயல்கிறது. ₹299 பிளான் நடைமுறையில் இருக்கும்போது, அதிக லாபத்திற்காக ₹349 திட்டத்தை திணிப்பது கண்டிக்கத்தக்கது. நிறுவனத்தின் இத்தகைய செயல்பாடுகளைப் புதுக்கோட்டை மாவட்ட செல்போன் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
போராட்ட எச்சரிக்கை
வாடிக்கையாளர்களின் நலனைப் பாதுகாக்கும் நோக்கில், ஜியோ நிறுவனத்தின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து விரைவில் மாவட்டம் தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என PMDA சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இப்படிக்கு,
புதுக்கோட்டை மாவட்ட செல்போன் விற்பனையாளர் நல சங்கம் (PMDA).
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.