பொதுமக்கள் தங்களுக்குத் தெரியாத அல்லது முன்பின் அறிமுகமில்லாத நபர்களுக்கு தங்களது ஆவணங்களைப் பயன்படுத்தி வங்கி கணக்கு (Bank Account) அல்லது சிம் கார்டுகளை (SIM Card) வாங்கித் தர வேண்டாம் என்று புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அவசரத் தேவை அல்லது தெரியாமல் செய்யும் இந்த ஒரு "சிறு உதவி" உங்களை ஒரு பெரும் குற்றவாளியாக மாற்றிவிடும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.
பொதுமக்கள் தங்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள காவல்துறை, தெரியாத நபர்களுக்கு வங்கி கணக்கு மற்றும் சிம் கார்டுகளை வாங்கிக் கொடுப்பது சட்டப்படி ஒரு குற்றமாகும் என்று தெரிவித்துள்ளது. இதன் மூலம் நடக்கும் குற்றச் செயல்களுக்கு உரிய ஆவணங்களின் உரிமையாளரே முழுப் பொறுப்பேற்க நேரிடும்.
அறிமுகமில்லாத நபர்களிடம் ஆவணங்களை ஒப்படைக்கும்போது பிஷிங் (Phishing) போன்ற சைபர் மோசடிகள், ஆன்லைன் ஷாப்பிங் மோசடிகள் மற்றும் நிதி மோசடிகள் தடையின்றி நடக்கின்றன. குற்றவாளிகள் உங்களது OTP, PIN மற்றும் Password போன்ற ரகசிய எண்களைப் பயன்படுத்தி உங்களது பணத்தைத் திருடுவது மட்டுமின்றி, உங்களது பெயரிலேயே போலி கணக்குகளைத் துவங்கி பல்வேறு சட்டவிரோதச் செயல்களிலும் ஈடுபடுகின்றனர். இறுதியில் குற்றம் நிரூபிக்கப்படும் போது, சட்ட ரீதியான அனைத்துப் பழிகளும், தண்டனைகளும் உங்களையே வந்து சேரும் அபாயம் உள்ளது.
எனவே, பொதுமக்கள் தங்களது ஆதார், பான் கார்டு போன்ற தனிப்பட்ட விவரங்களை யாருடனும் பகிரக் கூடாது என்றும், ரகசிய எண்களான OTP மற்றும் PIN நம்பர்களை எக்காரணம் கொண்டும் யாருக்கும் சொல்லக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்பின் தெரியாத அந்நியர்களின் வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் சந்தேகத்திற்கிடமான அழைப்புகளோ அல்லது சைபர் பண மோசடிகளோ ஏற்பட்டால், உடனடியாக 1930 என்ற சைபர் குற்ற உதவி எண்ணிற்கு (Cyber Crime Helpline) அழைத்துத் தொடர்பு கொள்ளலாம். மேலும், www.cybercrime.gov.in என்ற தேசிய சைபர் குற்றப் புகார் இணையதளம் மூலமாகவோ அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தை அணுகியோ தங்களது புகார்களைப் பதிவு செய்யலாம் என்று புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.