ஆவுடையார்கோவிலில் அடிப்படை வசதிகள் கேட்டு கிராமமக்கள் காத்திருப்பு போராட்டம்




ஆவுடையார்கோவிலில் அடிப்படை வசதிகள் கேட்டு கிராமமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காத்திருப்பு போராட்டம்

ஆவுடையார்கோவில் அருகே பலவரசன் ஊராட்சி மாகாளியேந்தல் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மேலும் இந்த கிராமத்தில் குடிநீர், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி கிராமமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதையடுத்து அடிப்படை வசதிகள் கோரி ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழர் தேசம் கட்சியினர் மற்றும் கிராமமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னுரிமை அடிப்படையில் குடிநீர்

இதுகுறித்து தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் தாசில்தார் சிவகுமார், ஆவுடையார்கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) பாலசுப்பிரமணியன், குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர் பவித்ரா, உதவி பொறியாளர் கிஷோர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி தமிழக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கிய பிறகு முன்னுரிமை அடிப்படையில் குடிநீர் வசதி செய்து தருவதாக கூறினார். இதையடுத்து ேபாராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தனிநபர் வீட்டுக்கு போகும் குடிநீர் குழாயை தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். மேலும் மாகாளியேந்தல் பள்ளிக்கு குடிதண்ணீர் வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தனர்.
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments