மணமேல்குடி வர்த்தக நலச்சங்கத்தினர் அமைச்சர் முகமது பர்வேசுக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனா். அதில், மணமேல்குடி தாலுகா தலைமை அரசு மருத்துவமனையில் போதுமான டாக்டர்கள், செவிலியர்கள் கிடையாது. 24 மணிநேரமும் மருத்துவர்கள் இருந்து சிகிச்சை அளிக்கும் நிலை இல்லாததால் அடிக்கடி சாலையில் நடக்கும் விபத்துக்களுக்கு உடனடியாக அவசர சிகிச்சை அளிக்கும் வசதி இல்லாததால் முதலுதவி மட்டும் அளித்து அறந்தாங்கி, புதுக்கோட்டை மருத்துவமனைகளுக்கு அனுப்புகின்றனர். இதனால் விபத்தில் காயமடைந்தவர்களை உடனடி சிகிச்சைக்கு இங்கிருந்து பல கிலோமீட்டர் தூரம் கொண்டு செல்லும் போது உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே தீவிர சிகிச்சை பிரிவும், 24 மணிநேரமும் டாக்டர்கள் சுழற்சி முறையில் பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மணமேல்குடி கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியுள்ள அம்மா பஸ் நிலையத்தில் குப்பைகளால் சுகாதாரம் இன்றி தூர்நாற்றம் வீசுவதால் அதனை சரிசெய்ய வேண்டும். மணமேல்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரத்தில் தொடர் மின்வெட்டால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். மின்தடை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வாசலில் உள்ள மின்கம்பம் மிகவும் பழுதடைந்துள்ளதை உடனடியாக மாற்ற வேண்டும். மணமேல்குடியில் பணிமனை அமைக்க வேண்டும். கிழக்கு கடற்கரைசாலை வழியாக செல்லும் கழிவுநீர் கால்வாய் திறந்தே கிடப்பதால் ஆடு, மாடுகள் உள்ளே விழுந்து விடுகிறது. எனவே இந்த கால்வாயை மூடி போட்டு மூட வேண்டும் என்று கூறியிருந்தனர்.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.