குமரப்பன்வயலில் ஆபத்தான நிலையில் சிமெண்ட் பூச்சு உதிர்ந்த மின்கம்பம்: புதிய கம்பம் அமைக்க பொதுமக்கள் அவசர கோரிக்கை!



புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி தாலுக்கா, வெட்டிவயல் பஞ்சாயத்திற்கு உட்பட்ட குமரப்பன்வயல் பகுதியில் ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்றியமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குமரப்பன்வயல் மாரியம்மன் கோவிலில் இருந்து கடற்கரைக்கு செல்லும் சாலையில் இந்த மின்கம்பம் அமைந்துள்ளது. தற்போது இந்த மின்கம்பத்தின் சிமெண்ட் பூச்சுகள் முற்றிலும் உதிர்ந்து, உள்ளே இருக்கும் இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் வகையில் மிகவும் பலவீனமாக காட்சி அளிக்கிறது.

இச்சாலையானது கடற்கரைக்கு செல்லும் முக்கியப் பாதையாக இருப்பதாலும், அப்பகுதியில் மரங்கள் மற்றும் பொதுமக்களின் நடமாட்டம் அதிகளவில் இருப்பதாலும், பலத்த காற்று வீசும் போதோ அல்லது மழைக் காலங்களிலோ இந்த மின்கம்பம் முறிந்து விழுந்து பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, ஏதேனும் அசம்பாவிதம் நடப்பதற்கு முன்னதாக மின்வாரிய அதிகாரிகளும், மாவட்ட நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு, இந்த ஆபத்தான மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பத்தை நட்டுத் தர வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments