பஸ் நிலையம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சியாகவும், சட்டமன்ற தொகுதியின் தலைநகரமாகவும் உள்ளது. இங்கு நகராட்சி அலுவலகம், அரசு மாவட்ட மருத்துவமனை, சப்- கலெக்டர் அலுவலகம், போலீஸ் நிலையம், நீதிமன்றங்கள், பத்திரப்பதிவு அலுவலகம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அரசு கலைக்கல்லூரி, அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஆண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளி, நகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளிட்டவைகள் உள்ளன.
இங்கு உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு அறந்தாங்கியில் உள்ள பஸ் நிலையத்தில் இருந்து தினமும் அதிக மாணவர்கள் வந்து செல்கின்றனர். இதனால் இந்த பஸ் நிலையம் எப்போதுமே மக்கள் நிறைந்து காணப்படுவதுடன் பரபரப்பாகவே காணப்படும்.
குடிநீர் தொட்டி அமைக்க ேவண்டும்
இந்த பஸ் நிலையத்தில் குடிநீர் வசதி இல்லை. இதனால் இங்கு வரும் பொதுமக்கள் தண்ணீர் இன்றி அலைந்து திரிகின்றனர். எனவே பஸ் நிலையத்தில் குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள், பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வளர்ந்து வரும் நகரம் என்பதால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கட்டண முறையில் வைக்கப்பட வேண்டும்.
சுத்திகரிக்கப்பட்ட எந்திரத்தில் 2 ரூபாய் நாணயம் போட்டால் 1 லிட்டர் குடிநீர் வரும்படி செய்து பொதுமக்களுக்கு தூய குடிநீர் கிடைக்க செய்ய வேண்டும். எனவே நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் பஸ் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள், பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.