ஒக்கூர் ஊராட்சிக்குட்பட்ட ஆவுடையார் கோவில் பிரதான சாலையில் உள்ள மின் கம்பங்கள் பலத்த சேதமடைந்து, சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து, உள்ளே இருக்கும் இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் வகையில் மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன.
இப்பகுதியில் இது போன்ற பல மின் கம்பங்கள் பழுதுடன் உள்ளதால், பலத்த காற்று வீசும் போதோ அல்லது மழைக்காலங்களிலோ இவை உடைந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் இந்த சாலையைக் கடந்து செல்கின்றனர்.
பெரிய அளவில் ஏதேனும் அசம்பாவிதம் நடப்பதற்கு முன்னதாக, மின்சார வாரிய அதிகாரிகளும் ஊராட்சி நிர்வாகமும் தலையிட்டு, இந்த ஆபத்தான மின் கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின் கம்பங்களை அமைத்துத் தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.