தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட குறுவட்ட அளவிலான கேரம் போட்டிகளில், மீமிசல் பாப்புலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தங்களது அபார திறமையை வெளிப்படுத்தி, அனைத்துப் பிரிவுகளிலும் முதலிடங்களைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
இப்போட்டிகளில் பெண்களுக்கான Under-14 ஒற்றையர் பிரிவில் மாணவி ஹான்யா (Hanya) முதலிடம் பிடித்து அசத்தினார். தொடர்ந்து நடைபெற்ற Under-17 பிரிவில், ஒற்றையர் பிரிவில் மாணவி S. சம்ரீனா (Samrina) முதலிடத்தையும், இரட்டையர் பிரிவில் S. சம்ரீனா மற்றும் சுமையா பாத்திமா (Sumaiya Fathima) ஆகிய இருவரும் முதலிடத்தையும் கைப்பற்றி பள்ளிக்குப் பெருமை சேர்த்தனர்.
அதேபோல், Under-19 பிரிவின் ஒற்றையர் போட்டியில் மாணவி R. இனியா (Eniya) இரண்டாம் இடத்தைப் பிடித்தார். மேலும், இதன் இரட்டையர் பிரிவில் R. இனியா மற்றும் சையத் ஜின்னீரா பேகம் (Syed Zinneera Begam) ஆகிய இருவரும் இணைந்து விளையாடி முதலிடத்தைக் தட்டிச் சென்றனர்.
இப்போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற பாப்புலர் பள்ளி மாணவிகள் அனைவரும், அடுத்த கட்டமாக நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான கேரம் போட்டிகளில் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த மாணவச் செல்வங்களையும், அவர்களைச் சீரிய முறையில் வழிநடத்தி பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்களையும் பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி, தங்களது நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
எங்களுடன் இணைந்திருங்கள்
எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.