கோட்டைப்பட்டினத்தில் மீண்டும் இயங்கத் தொடங்கியது ஆதார் மையம்: பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள அழைப்பு!



கோட்டைப்பட்டினம் ஆனா அறக்கட்டளை வளாகத்தில் இயங்கி வந்த ஆதார் சேவை மையம், கடந்த மூன்று நாட்களாக தொழில்நுட்ப காரணங்களால் செயல்படாமல் இருந்தது.

​இதனால், புதிய ஆதார் கார்டு விண்ணப்பம், முகவரி மாற்றம், பெயர் திருத்தம் மற்றும் கைரேகை பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளுக்காக வந்த சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

​இந்நிலையில், அனைத்துப் பணிகளும் சீரமைக்கப்பட்டு இன்று (வியாழக்கிழமை) முதல் மீண்டும் ஆதார் சேவை மையம் வழக்கம்போல் இயங்கத் தொடங்கியுள்ளது.
எனவே, சுற்றுவட்டார பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது ஆதார் சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments