முஹர்ரம் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்(1.1.1433)புனிதமிக்க முஹர்ரம் மாதத்தின் கண்ணியம் காப்போம் :- வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி.
(புனிதமான) அம்மாதங்களில் உங்களுக்கு நீங்கள் தீங்கு இழைத்து விடாதீர்கள்! இணை கற்பிப்போர் ஒன்று திரண்டு உங்களுடன் போரிடுவது போல் நீங்களும் ஒன்று திரண்டு அவர்களுடன் போரிடுங்கள்! அல்லாஹ் (தன்னை) அஞ்சுவோருடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! – அல் குர் ஆன் (9:36) 'வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பி விட்டது. வருடம் என்பது பன்னிரண்டு மாதங்களாகும்.


 அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக் கூடியவை. அவை – துல்கஅதாஃ, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜமாத்துல் ஆகிர்-க்கும், ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ரஜப் மாதமாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.' (அறிவிப்பவர்: அபூபக்ரா (ரழி), நூல்: ஸஹீஹுல் புஹாரி- -3197) மாதங்கள் என்பது பன்னிரண்டு என்பதும் அதில் முஹர்ரம் மாதமும் புனிதத்துக்குறியது என்றும் அதில் செய்ய வேண்டிய அமல்கள் என்ன என்பதையும் நபி(ஸல்) அவர்கள் சொல்லிதந்துள்ளார்கள் முழுமையாக்கப்பட்ட இஸ்லாம் ............இன்றையதினம்.எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். .......... அல் குர் ஆன் (5:3) இஸ்லாம்.

அன்பு வாழ்த்துக்களுடன்

Post a Comment

0 Comments