இன்டேன் சமையல் எரிவாயு இனிமேல் அடு‌த்தநாளே ப‌தியலா‌ம்!சமைய‌ல் எ‌ரிவாயு வாங்கி 20 நா‌ட்க‌ள் கா‌த்‌திரு‌ந்துதா‌ன் ப‌திவு செ‌ய்ய வே‌ண்டு‌ம். ஆனா‌ல் இ‌னி சமைய‌ல் எ‌ரிவாயு வ‌ந்த மறுநாளே ப‌திவு செ‌ய்துகொ‌ள்ளலா‌ம் எ‌ன்று இண்டேன் நிறுவன‌ம் அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இது கு‌றி‌த்து இண்டேன் மண்டல மேலாளர் முரளி கூறுக‌கை‌யி‌ல், சமைய‌ல் எ‌ரிவாயு பதிவுசெய்ய தானியங்கி குரல் பதிவு முறையை (IVRS)  குறுஞ்செய்தி வசதி அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆங்கிலத்தில்  IOC என்று டைப் செய்து சிறிது இடைவெளிவிட்டு அந்தந்த பகுதி வினியோகஸ்தரின் போன் நம்பரை டைப் செய்ய வேண்டும். பின்னர் வாடிக்கையாளரின் நுகர்வோர் எண்ணுடன் தனது கைபேசியில் இருந்து 8124024365 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது.

வாடிக்கையாளர்கள் இந்த எண்ணில் 24 மணி நேரமும் எல்லா நாட்களிலும் பதிவு செ‌ய்து கொ‌ள்ளலாம். இதற்கு முன்னர் சமைய‌ல் எ‌ரிவாயு வந்த 21 நாட்களுக்கு பிறகே வி‌நியோகஸ்தரின் க‌ணி‌‌னி‌யி‌ல் பதிய முடியும். ஆனால்  IVRS முறையில் வாடிக்கையாளர்கள் சமைய‌ல் எ‌ரிவாயு வாங்கிய மறுநாளே அடுத்த சமைய‌ல் எ‌ரிவாயு‌க்குப் பதிவு செய்யலாம்.இப்புதிய முறையால் கே‌ஸ் ஏஜென்சி நிறுவனங்களில் பதிய மறுப்பதாகச் சொல்லப்படும் புகார்கள் இனிமேல் வராது.

தற்போது வாடிக்கையாளர் பதிவு செய்து 30 முதல் 45 நாட்கள் வரை காலதாமதம் ஆகிறது. இந்த இடைவெளியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எ‌ன்று முர‌ளி தெரிவித்தார்.


அறந்தாங்கி சுற்றுவட்டார இன்டேன் வாடிக்கையாளர்கள் SMS அனுப்பும் முறை

IOC 04371222249 23083

No.DistributorAddressContact No.EmailLocate on Map
1SATHYAMOORTHY INDANE GAS SER. 27,AVUDAYAR KOIL ROAD, ARANTHANGI - 614616 222249,221549,222236 Send Email Locate On Map

Post a Comment

0 Comments