மீமிசல் மற்றும் கோபாலபட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மடிக்கணிணி வழங்கும் விழாபுதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி கல்வி மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட மீமிசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 117 மடிக்கணிணிகளும், கோபாலபட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 23 மடிக்கணிணிகளையும் மாவட்ட கழக அவைத்தலைவரும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினருமான இ.ஏ.இரத்தினசபபாபதி அவர்கள் வழங்கினார்.
இவ்விழாவில் இரு பள்ளி தலைமை ஆசிாியர்கள், பெற்றோர் ஆசிாியர் சங்க தலைவர்கள், இருபால் ஆசிாியர்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.Post a Comment

0 Comments