இன்று முதல் அமலுக்கு வந்தது! இனி இன்கமிங் கால்களுக்கு கட்டணம்...!



இனி ப்ரீபைட் வாடிக்கையாளர்களுக்கு இலவச இன்கமிங் கால்கள் கிடையாது என செல்போன் நிறுவனங்கள் அதிரடியான நடவடிக்கையை எடுத்துள்ளன.

இந்த அறிவிப்பின் படி, இனிமேல் ரீசார்ஜ் செய்யாமல் இன்கமிங் கால்களை பெற முடியாது. அன்லிமிடெட் பேக் இல்லாத வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 35 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் மட்டுமே அவுட்கோயிங் கால்களை செய்ய முடியும். மேலும் இது 28 நாட்களுக்கு மட்டுமே பொருந்தும், அதன் பிறகு இந்த சேவை துண்டிக்கப்படும்.

மீண்டும் அவுட்கோயிங் வசதியை பெற ரூ.35 முதல் அதிகபட்சம் ரூ. 495 வரையில் ஏதாவது ஒன்றை ரீசார்ஜ் செய்ய வேண்டும். அவ்வாறு ரீசார்ஜ் செய்யாவிட்டால் அடுத்த 15 நாட்களுக்கு இன்கமிங் கால்கள் மட்டுமே பெற முடியும். 16-ம் நாள் அந்த இன்கமிங் கால்களும் துண்டித்து விடும்.

மீண்டும் இந்த சேவையை பெற அடுத்த 90 நாட்களுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யாவிட்டால் 90 நாட்களுக்கு பின் உங்கள் எண் முற்றிலும் சேவை நீக்கம் செய்யப்படும் என செல்போன் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இந்த திட்டத்தை இன்று முதல் வோடபோன், ஐடியா, ஏர்டெல் அறிமுகப்படுத்தியுள்ளது. 

அதிரடி விலைகுறைப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தும் ஜியோவும் இது போன்ற திட்டங்களை நடைமுறைபடுத்தலாம் என எதிர்பார்க்க படுகிறது. இந்த திட்டத்தால் வெறும் இன்கமிங் கால்களை மட்டுமே பெறும் அடிமட்ட தொழிலாளர்கள் மற்றும் பெரியவர்கள் பெரும் அளவில் பாதிக்கப்படுவர்.

மேலும் தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள

Post a Comment