கோபாலப்பட்டினம் தோப்பு பகுதியில் சட்ட விரோதமாக மணல் எடுப்பதை தடுக்க கோரி த.மு.மு.க சார்பாக மனு அளிக்கபட்டது



கோபாலப்பட்டினம் மற்றும் மீமிசல் மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்குவது அரண்மனை தோப்பில் இருந்து எடுத்து வரும் ஊற்று நீர் ஆகும். ஆனால் தற்பொழுது அங்கு திருட்டுத்தனமாக மணல் எடுக்கப்படுகிறது. எனவே அங்கு ஊற்று நீர் வற்றிய நிலையில் காணப்படுகிறது.
இதனால் அதை சுற்றியுள்ள பகுதி மக்கள் குடிநீருக்காக ரொம்பவும் சிரமப்படுகிறார்கள். எனவே அப்பகுதி மக்களின் கோரிக்கையின் பேரில் த.மு.மு.க சார்பாக கோட்டாட்சியர் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.






மனுவில் தெரிவிக்கப்பட்டவை:
  
 ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக மீமிசல் அருகிலுள்ள கோபாலப்பட்டினம் செல்லும் வழியில் ஊற்றுநீர் எடுக்கும் பகுதியில் டிராக்டர் மற்றும் மாட்டு வண்டியில் மணல் அள்ளிச் செல்கின்றனர். இதனால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை எனவே கோட்டாட்சியர் அவர்கள் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கும்படி உங்களை பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

புகார் மனு அளித்தார்: 

தலைவர் முகமது  மசூது
கோபாலப்பட்டினம் கிளை 
ஆவுடையார்கோவில் ஒன்றியம் 
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் 

மேலும் மாவட்ட துணை செயலாளர் வழக்கறிஞர் சேக் தாவூதீன், மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர் .

Post a Comment