என்ன நடக்குது? குழந்தைகளுக்கான பவுடரில் ஆஸ்பெஸ்டாஸ் துகள்களா??



பல ஆண்டு காலமாக குழந்தைகளுக்கான பவுடர் என்று மார்க்கெட்டில் கூவி கூவி விற்கப்படும் பவுடரில் ஆஸ்பெஸ்டாஸ் துகள்கள் சேர்ந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறைந்தது 1971ம் ஆண்டு முதல் 2000-ஆவது ஆண்டு வரை நடத்தப்பட்ட ஆய்வுகளில் இது உறுதி செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி, குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோருக்கு பேரதிர்ச்சி கொடுத்துள்ளார்.

டார்லேன் கோகர் என்ற பெண்ணுக்கு விரைவில் உயிரிழக்கப் போகிறார் என்பது அவருக்குத் தெரியும். ஆனால், ஏன் உயிரிழக்கப் போகிறார் என்பதை அறிய விரும்பினார்.

அவரது நுரையீரல் மற்றும் இதர உள்ளுறுப்புகளை புற்றுநோய் தாக்கியிருந்தது. இது மிகவும் அரிதான நோய் என்றும், ஆஸ்பெஸ்டாஸ் துகள்களால் இந்த நோய் ஏற்படும் என்றும் அறிந்திருந்தார். சுரங்கங்கள், கப்பல் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு மட்டுமே ஏற்படும் இந்த நோய் தனக்கு ஏற்பட்டது எப்படி? என்று அறிய விரும்பினார்.

தொடர் ஆய்வில்தான், அவர் தனது பிள்ளைகளுக்கும், தனது வாழ்நாள் முழுவதும் அந்த குழந்தைகளுக்கான பவுடரைப் பயன்படுத்தி வந்துள்ளார். அதில் இருந்த ஆஸ்பெஸ்டாஸ் துகள்தான், அவரது மரணத்துக்குக் காரணமாக அமைந்துள்ளது.

வழக்குத் தொடர முயற்சித்தாலும், ஆதாரங்கள் கிடைப்பதில் சிக்கல் இருப்பதால் அந்த முடிவை கைவிட்டுள்ளார்.

குழந்தைகளுக்கான பவுடரில் இந்த அளவுக்கு கலப்படம் நடந்திருப்பதை அடுத்தே, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து வரும் பல விதமான பொருட்கள் மக்களை கடுமையான நோய்க்குத் தள்ளிவிடுவதும், அதனைத் தொடர்ந்து அந்த நோய்க்கும் மருந்துகளை அந்நாடே நமக்கு ஏற்றுமதி செய்துத் தருவதும் கேட்பாறின்றி வாழும் மனிதர்களின் நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருப்பதை உணர முடிகிறது.

நன்றி : தினமணி 

Post a Comment