ட்ராய் அதிரடி அறிவிப்பு! இரண்டு நாட்களில் இன்னொரு டெலிகாம் நிறுவனத்துக்கு மாறலாம்!’



மொபைல் என்னை மாற்றாமலேயே ஒரு டெலிகாம் சேவை நிறுவனத்திலிருந்து மற்றொரு டெலிகாம் சேவை நிறுவனத்துக்கு மாறும் முறையை மேலும் எளிமைப்படுத்த `Mobile Number Portability’ விதிமுறைகளை மாற்றியமைத்துள்ளது ட்ராய் அமைப்பு. 

இனி ஒரே டெலிகாம் வட்டத்துக்குள் (அல்லது ஒரு Intra-LSA வுக்குள்) ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனத்துக்கு மாற இரண்டே நாட்கள்தான் ஆகும். மற்ற டெலிகாம் வட்டத்துக்கு மாறவும் 4 நாள்கள்தான் இனி ஆகும்.

இதை மீறும், MNP பற்றி தவறான தகவல்களை வாடிக்கையாளர்களுக்குத் தரும், மாறும் வாடிக்கையாளர்களின் விண்ணப்பத்தை மறுக்கும் டெலிகாம் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் ட்ராய் அறிவித்துள்ளது. மேலும் சில வட்டங்களைத் தவிர மற்ற வட்டங்களுக்கு இப்படி மாறுவதற்காக வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கப்படும் Unique Porting Code (UPC) எண் இனி நான்கு நாள்களுக்குத்தான் செல்லுபடி ஆகும். காஷ்மீர், அசாம், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள வட்டங்களில் மட்டும் இந்த மாறுதல்கள் இருக்காது.

Corporate Porting மூலம் ஒரு கடிதத்தில் 50-க்குப் பதிலாக 100 எண்களை இன்னொரு சேவை நிறுவனத்துக்கு ஒரு ஸ்தாபனத்தால் மாற்ற முடியும். இந்தப் புதிய வழிமுறைகள் செயல்படுத்தப்பட்ட பின் அனைத்து நிறுவனங்களும் இதைச் சரியாகப் பின்பற்றுகிறதா என்பது சோதனையிடப்படும் என்றும் அறிவித்துள்ளது ட்ராய்.

கடந்த சில வாரங்களில் ஜியோ தவிர்த்து மற்ற டெலிகாம் நிறுவனங்கள், தங்கள் விலைகளை மாற்றியமைத்து இன்கமிங்குக்கும் பணம் கட்டும் வகையில் தங்களது பிளான்களை மாற்றியமைத்தது குறிப்பிடத்தக்கது.   

Post a Comment