தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் துவங்க பட்டு வருகின்றன. இந்த நிலையில் ஆங்கில வழி வகுப்புகளில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு கட்டண விவரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.
* தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, கோவை மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் கட்டண விவரங்களை வெளியிட்டுள்ளார்.
* அதன் படி 1 முதல் 8 ஆம் வரை ஆங்கில வழி கல்வி படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டு கட்டணமாக 200 ரூபாயும் , 9 மற்றும் 10 வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு 250 ரூபாயும், 11 மற்றும் 12ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு 500 ரூபாயும் கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
* கூடுதலாக பெற்றோர் ஆசிரியர் கழக நிதியாக 50 ரூபாயும் வசூலிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த கட்டணங்களை மீறி அதிக கட்டணங்களை தலைமையாசிரியர்கள் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை எச்சரித்துள்ளது.