திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு !



தமிழகத்தில் லோக்சபா தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் வேகமாக தயாராகி வருகின்றன. நேற்று அதிமுக-பாஜக-பாமக கூட்டணி உறுதி செய்யப்பட்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.

இன்று எதிர்க்கட்சியான திமுக, காங்கிரசுடன் கூட்டணி குறித்து ஆலோசித்து வந்தது. இந்நிலையில் இன்று கூட்டணியை உறுதி செய்வதற்காக தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் சென்னை வந்தார்.

அதனைத்தொடர்ந்து திமுக-காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் தீவிர ஆலோசனை நடத்தினர். பின்னர் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு தமிழகத்தில் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் 9 தொகுதிகளும், புதுச்சேரியில் 1 என மொத்தம் பத்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Post a Comment