புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரியில் இன்று முதல் 10 நாட்களுக்கு மருத்துவக் கண்காட்சி



பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியின் மீது ஈர்ப்பினை ஏற்படுத்தும் வகையில், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மருத்துவக் கண்காட்சி புதன்கிழமை (பிப். 27) தொடங்கி மார்ச் 8 வரை 10 நாட்கள் நடைபெறவுள்ளது.

கண்காட்சியை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தொடங்கி வைக்கிறார். விழாவில், மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி, கல்லூரி முதல்வர் ஏ.எல். மீனாட்சிசுந்தரம் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர்.

கண்காட்சியில், மருத்துவக் கல்லூரியிலுள்ள 26 துறைகளின் மூலம் தனித்தனியே அரங்குகள் அமைக்கப்படுகின்றன. குறிப்பாக அறுவை சிகிச்சை அரங்குகளும் அவற்றில் மேற்கொள்ளப்படும் அரிய அறுவைச் சிகிச்சைகளைப் பற்றிய விளக்கங்களும், மாணவர்களுக்கு அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பதப்படுத்தப்பட்ட உடல்கள், சைக்கிள் ஓட்டும் எலும்புக்கூடு, நடனமாடும் எலும்புக் கூடு, நடனமாடும் பிரேதங்கள் உள்ளிட்ட மாதிரிகளும் வைக்கப்படவுள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்களும் கண்காட்சியைப் பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நன்றி: தினமணி 

Post a Comment

0 Comments