ஆர்.புதுப்பட்டினத்தில் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் அரசு பள்ளி கட்டிடம் உள்ளது. இதனால் தினம்தோறும் மாணவர்கள் அச்சத்துடன் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.
எனவே கட்டிடத்தை விரைந்து சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அடுத்த ஆர்.புதுப்பட்டினத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இங்கு 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தின் மேற்கூரையில் சேதம் ஏற்பட்டு சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்தன. இதனால் மாணவ, மாணவியருக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில் கல்வித்துறையும், ஊர் பொதுமக்களும் சேர்ந்து அந்த கட்டிடத்துக்கு அருகே உள்ள கட்டிடத்துக்கு வகுப்பறையை மாற்றினர்.

வகுப்பறை மாற்றப்பட்டு பல ஆண்டுகளை கடந்த பின்பும் சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை சீரமைக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுகுறித்து ஆர்.புதுப்பட்டினம் தமுமுக கிளை செயலாளர் முகமது முஸ்தாக் கூறியதாவது: ஆர்.புதுப்பட்டினம் அரசு பள்ளி கட்டிடம் சேதமடைந்தது குறித்து நாங்கள் பலமுறை பள்ளி கல்வித்துறைக்கு புகார் செய்தோம். ஆனால் அவர்கள் அந்த கட்டிடத்தை சீரமைக்க இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. கட்டிடம் சேதமடைந்ததால் தற்போது மாணவ,மா ணவியர் மற்றொரு கட்டிடத்தில் கடும் நெருக்கடியுடன் அமர்ந்து படித்து வருகின்றனர். மேலும் பள்ளி வளாகத்தில் உள்ள இந்த கட்டிடம் எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் மாணவ, மாணவியர் தினம்தோறும் வந்து செல்கின்றனர். மேலும் ஆசிரியர்களும் அச்சத்துடனேயே வகுப்புகளை எடுத்து வருகின்றனர். எனவே மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு சேதமடைந்த கட்டிடத்தை விரைந்து சீரமைக்க வேண்டும் என்றார்.
எனவே மாணவர்கள், ஆசிரியர்கள் நலனை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகமும், கல்வித்துறையும் உடனடியாக ஆர்.புதுப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சேதமடைந்த கட்டிடத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு மாணவர்களின் பெற்றோர், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தின் மேற்கூரையில் சேதம் ஏற்பட்டு சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுந்தன. இதனால் மாணவ, மாணவியருக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்ற எண்ணத்தில் கல்வித்துறையும், ஊர் பொதுமக்களும் சேர்ந்து அந்த கட்டிடத்துக்கு அருகே உள்ள கட்டிடத்துக்கு வகுப்பறையை மாற்றினர்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.