தேசிய குத்துச்சண்டையில் புதுகை மாணவி இரண்டாமிடம்



மேற்குவங்க மாநிலம் துர்க்காபூரில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான குத்துச்சண்டைப் போட்டியில் தமிழ்நாடு அணியின் சார்பில் பங்கேற்ற புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மாணவி கலைவாணி தேசிய அளவில் இரண்டாமிடம் பெற்றார்.
45 முதல் 48 எடைக்குள்பட்டோருக்கான பிரிவில் தேசிய அளவில் அவர் இரண்டாமிடம் பெற்றதைத் தொடர்ந்து, அவரை கல்லூரியின் முதல்வர் ஜெ. சுகந்தி, உடற்கல்வி இயக்குநர் இ. ஜான் பார்த்திபன்,உடற்பயிற்சி பயிற்சியாளர் அ.க. ராம்குமார், குத்துச்சண்டை பயிற்சியாளர் பார்த்திபன் ஆகியோர் பாராட்டினர்.

மேலும் பல வெற்றிகளை பெற கோபாலப்பட்டினம் இணையதளம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Post a Comment

0 Comments