தமிழகம் முழுவதும் பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கான அரசு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 82 மையங்களில் தமிழ் தேர்வு நேற்று நடந்தது.
இதையொட்டி மாணவ-மாணவிகள் காலை 8.30 மணியளவில் இருந்தே தேர்வு மையங் களுக்கு வரத்தொடங்கினர். மேலும் அவர்கள் ஆங்காங்கே கூடியிருந்து படித்தனர். பின்னர் அவர்கள் பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த தகவல் பலகையில் ஒட்டப்பட் டிருந்த அறிக்கையில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு அறையினை ஆர்வத்துடன் பார்த்தனர். பின்னர் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடந்தது. பின் தேர்வில் மாணவ-மாணவிகள் கடைபிடிக்க வேண்டிய வழி முறைகள் குறித்து எடுத்து கூறி ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும் கூறப்பட்டது.
தேர்வு நடக்கும் போது வெளியாட்கள் யாரும் உள்ளே வந்துவிடாத வகையில் அனைத்து தேர்வு மையங்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் 9.45 மணியளவில் தேர்வறைக்கு மாணவ-மாணவிகள் சென்று தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்தனர். பின்னர் 10 மணியளவில் வினாத்தாள் அவர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டது. பின்னர் 10 நிமிடங்கள் வினாக்களை வாசிக்க நேரம் ஒதுக்கப்பட்டது. இதை தொடர்ந்து தேர்வினை மாணவர்கள் ஆர்வத்துடன் எழுத தொடங்கினர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, அறந்தாங்கி, இலுப்பூர் ஆகிய 3 கல்வி மாவட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மூன்று கல்வி மாவட்டங்களையும் சேர்த்து 20 ஆயிரத்து 229 மாணவ-மாணவிகள் பிளஸ்-1 தேர்வு எழுத இருந்தனர். இதில் நேற்று நடந்த தேர்வில் 8 ஆயிரத்து 622 மாணவர்களும், 10 ஆயிரத்து 212 மாணவிகளும் என மொத்தம் 18 ஆயிரத்து 834 பேர் தேர்வு எழுதினர். இதில் 1,018 மாணவர்களும், 377 மாணவிகளும் என 1,395 மாணவ, மாணவிகள் தேர்வெழுதவில்லை.
முன்னதாக புதுக்கோட்டையில் உள்ள டி.இ.எல்.சி மேல்நிலைப்பள்ளியில் பொதுத்தேர்வு நடைபெறும் மையத்தை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வனஜா பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேர்வு பணியில் முதன்மை கண்காணிப் பாளர்கள் 82 பேர், கூடுதல் கண்காணிப்பாளர்கள் 3 பேர், துறை அலுவலர்கள் 3 பேர், அறை கண்காணிப்பாளர்கள் 961 பேர், பறக்கும் படையினர் 164 பேர், வழித்தட அலுவலர்கள் 18 பேர் ஈடுபட்டுள்ளனர்.
நன்றி: தினத்தந்தி
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.