தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமமானது காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறை போன்ற சீருடைப் பணியிடங்களுக்கான காலியிடங்களை நிரப்பி வருகிறது.
இந்நிலையில், தமிழ்நாடு காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத்துறையில் மொத்தம் 8826 இரண்டாம் நிலை காவலர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதில், காவல்துறையில் மட்டும் 8427 காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதிலும், மாவட்ட / மாநர ஆயுதப்படையில் பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு 2465 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
சிறைத்துறையில் 186 ஆண்கள், 22 பெண்கள் என்று 208 காவலர் காலிப்பணியிடங்கள் நிரப்பட உள்ளது. தீயணைப்புத்துறையில் தீயணைப்பாளர் பணிக்கு 191 காலியிடங்கள் நிரப்பட உள்ளது.
தேர்வு செயப்படும் காவலர்களுக்கு ரூ.18200 - 52900 என்ற விகிதத்தில் ஊதியம் வழங்கப்படும்.
ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. www.tnusrbonline.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வு குறித்த முழு தகவல்களை இந்த இணையதளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
விண்னப்பிக்க 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது, விண்ணப்பதாரர்கள் 01-01-2019 அன்று 18 வயது நிறைவடைந்தவராகவும், 24 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
எனினும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உச்ச வயது வரம்பு 26 ஆகவும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு உச்ச வயது வரம்பு 29 ஆகவும், ஆதரவற்ற விதவைகளுக்கு 35 ஆகவும் உள்ளது.
எழுத்து மற்றும் உடற்தகுதி தேர்வு மூலம் விண்ணப்பதார்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும், முழு விபரங்களுக்கு www.tnusrbonline.com என்ற இணையதளத்தில் உள்ள அறிவிப்பாணையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.