புதுக்கோட்டை மாவட்டத்தில் மார்ச் 11-இல் உள்ளூர் விடுமுறை



திருவப்பூர் அருள்மிகு ஸ்ரீ.முத்துமாரியம்மன் திருக்கோவில் தேர்திருவிழாவை முன்னிட்டு 11.03.2019 திங்கள் கிழமையன்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்ததாவது.

புதுக்கோட்டை, திருவப்பூர் அருள்மிகு ஸ்ரீ.முத்துமாரியம்மன் திருக்கோவில் தேர்திருவிழா 11.03.2019 திங்கள் கிழமையன்று நடைபெறுவதை முன்னிட்டு அன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை எனவும், அதற்கு பதிலாக 23.03.2019 சனிக்கிழமை அன்று பணிநாள் எனவும், வழக்கமாக சனிக்கிழமைகளை பணி நாளாக கொண்ட அலுவலகங்களுக்கு 24.03.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பணிநாள் எனவும் அறிவிக்கப்படுகிறது.

இந்த உள்ளூர் விடுமுறை 1881-ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழான விடுமுறை நாள் அல்ல எனவும், இந்த உள்ளூர் விடுமுறை நாளன்று புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலகம் மற்றும் சார்நிலை கருவூலகங்களும் குறைந்தபட்ச அலுவலர்களுடன் அரசின் பாதுகாப்பினைக் கருதியும் அவசர அலுவல்கள் மேற்கொள்ளும் பொருட்டும் திறந்திருக்கும். மேலும், அரசு பொதுத்தேர்வுகள், அரசு அறிவித்த தேதிகளில் நடைபெறும் எனவும், இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பி.உமாமகேஸ்வரி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments