புதுக்கோட்டையில் முகிலனைக் கண்டுபிடிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்



சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் முகிலனைக் கண்டுபிடிக்க வலியுறுத்தி புதுக்கோட்டையில் புதன்கிழமை மாலை அனைத்துக் கட்சியினர் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

பியு. சின்னப்பா பூங்கா அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சியின் மாவட்டச் செயலர் அருண்மொழி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எஸ் கவிவர்மன், தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்டச் செயலர் நியாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கலைமுரசு உள்ளிட்டோரும் பங்கேற்றுப் பேசினர். ஸ்டெரிலைட் ஆலை விவகாரம் உள்பட பல்வேறு சுற்றுச்சூழல் சார்ந்த போராட்டங்களில் தொடர்ந்து தீவிரமாகச் செயல்பட்டு வந்த முகிலன் கடந்த சில நாட்களாகக் காணவில்லை. மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களில் ஈடுபட்டு வந்த செயற்பாட்டாளரைக் கண்டுபிடிக்க வேண்டியதும், அவருக்குப் பாதுகாப்பு வழங்குவதும் அரசின் பொறுப்பு என ஆர்ப்பாட்டத்தில் பேசியவர்கள் வலியுறுத்தினர்.

Post a Comment

0 Comments