வெளிநாடுகளில் சுமார் 3.10 கோடி இந்தியர்கள் வசிக்கின்றனர். குறிப்பாக வளைகுடா நாடுகளில் லட்சக்கணக்கான தமிழர்கள் பணியாற்றுகின்றனர்.
வெளிநாடுகளில் இருந்து ஆன்லைனில் வாக்களிக்கும் உரிமை வேண்டும் என்று வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் கோரிக்கை வைத்த நிலையில் இதுவரை செயல்படுத்தபடவில்லை. எனவே என்ஆர்ஐ-கள் ஆன்லைனில் வாக்களிக்க முடியாது. என்ஆர்ஐ-கள் ஆன்லைனில் வாக்களிக்க வேண்டுமென்றால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும். அதுபோன்ற திருத்தம் எதுவும் செய்யப்படவில்லை.
இப்போதைய நிலையில், வெளிநாட்டு வாழ் இந்தியர் ஒருவர் வாக்களிக்க வேண்டுமென்றால், அவர் தனது பெயரை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து, இந்தியாவுக்கு வந்து தனது தொகுதிக்கு சென்று பாஸ்போர்ட்டை காட்டி ஓட்டளிக்கலாம் என்ற நிலைதான் நீடிக்கிறது.
இந்நிலையில் வளைகுடா நாடுகளில் பணியாற்றும் தமிழகத்தின் பல்வேறு கட்சிகளை சார்ந்தவர்கள் அரசியல் ஆர்வலர்களும் தேர்தல் பணிக்காக தங்கள் நிறுவனங்களில் முன்னதாக விடுமுறை எடுத்து ஊர் திரும்புகின்றனர். அதே போன்று வாக்குப்பதிவு நாளன்றும் தங்களது வாக்கை பதிவு செய்யும் வகையில் ஊர் திரும்ப ஆர்வத்துடன் உள்ளனர்.
அதே போன்று வாட்ஸ்அப், பேஸ்புக் மூலம் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் மூலம் வெளிநாடுகளில் இருந்து தங்களின் ஆதரவு கட்சிக்கு வாக்கு சேகரிக்கின்றனர். அமீரகத்தில் பணியாற்றும் தமிழகத்தை சேர்ந்த பிலால் என்பவர் கூறும்போது, ‘‘எனக்கு விருப்பமான கட்சியின் தேர்தல் பணிக்காக ஊர் திரும்புகிறேன் இதற்காக எனது நிறுவனத்தில் விடுமுறைக்கு விண்ணப்பித்துள்ளேன்’’ என்றார்.
துபாயில் பணியாற்றும் பாவை ஹனிபா என்பவர் கூறுகையில், ‘‘ஐந்து வருடத்திற்கு ஒரு முறை கிடைக்கும் இந்த ஜனநாயக வாய்ப்பை தவற விடகூடாது என்ற எண்ணத்தில் தேர்தலுக்காக ஊர் திரும்புகிறேன். இம்முறை சென்னையில் எனது விருப்பமான கட்சிக்காக தேர்தல் பணியாற்ற உள்ளேன். அடுத்த தேர்தலில் எங்களை போன்ற வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு இங்கிருந்தே ஆன்லைன் மூலம் வாக்களிக்கும் வாய்ப்பை அரசாங்கம் ஏற்படுத்தி தர வேண்டுமென கேட்டு கொள்கிறேன்’’ என்றார்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.