குவைத் நாட்டில் இறந்த புதுக்கோட்டை மாவட்ட தொழிலாளியின் உடலை சொந்த ஊர் கொண்டுவர கோரிக்கை



உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு வழி வகை செய்ய வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மற்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு சவரியம்மாள் மற்றும் அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆலங்குடி தாலுகா கே.ராசியமங்களத்தை சேர்ந்தவர் மெய்கேல்ஜோசப் (வயது 50). கூலி தொழிலாளியான, இவர் குவைத் நாட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு சவரியம்மாள் என்ற மனைவியும், மரியதீபா, பிரின்ஸ்மி என்று 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் நேற்று சவரியம்மாளுக்கு குவைத் நாட்டில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியவர், மெய்கேல்ஜோசப் மர்மமான முறையில் இறந்து விட்டதாக கூறினார். 

இதனால் அதிர்ச்சியடைந்த சவரியம்மாள் கண்ணீர் விட்டு அழுதார். இதையடுத்து மெய்கேல்ஜோசப் உடலை எப்படி சொந்த ஊருக்கு கொண்டு வருவது என்று அவரது உறவினர்கள் முயற்சி செய்து வருகின்றனர். இதையடுத்து மெய்கேல்ஜோசப் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு வழி வகை செய்ய வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மற்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு சவரியம்மாள் மற்றும் அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.  

Post a Comment

0 Comments