எச்சரிக்கை!!! அறந்தாங்கி அருகே குறி சொல்வதாக கூறி செல்போன், பணம் நூதன முறையில் திருட்டு



திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள செல்லக்குட்டி என்ற ஊரை சேர்ந்த மகாலிங்கம், ஆறுமுகம், செல்வம், ராஜசேகர், ராஜேஷ், காளியப்பன், சுந்தரம், செந்தில்குமார் மற்றும் 4 பெண்கள் அடங்கிய ஒரு குழுவினர் அறந்தாங்கியை அடுத்த ஆவணத்தான்கோட்டை கடைவீதியில் தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சென்று குறி சொல்லி வந்தனர்.

இந்நிலையில் மாங்குடி கிராமத்திற்கு 8 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் சென்று, அங்குள்ள பொது மக்களிடம் குறி சொல்லினர்.

பின்னர் பொதுமக்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி, அவர்களை ஏமாற்றி பணம், மோதிரம், செல்போன் போன்றவற்றை வாங்கிக் கொண்டு, ஆவணத்தான் கோட்டைக்கு சென்று விட்டனர்.

இதைத் தொடர்ந்து பணம், நகை, செல்போன் போன்றவற்றை குறிசொல்பவர்கள் பறித்துச் சென்றதை அறிந்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள்ஆவணத்தான்கோட்டைக்கு சென்று, பணம், நகை,செல்போன்களை பறித்துச் சென்றவர்களை பிடித்து அறந்தாங்கி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடமிருந்து பணம், நகை, செல்போன் மீட்கபட்டது.

இது குறித்துஅறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments