பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு நேற்று தேர்வு நிறைவடைந்தது. இதையடுத்து மாணவ, மாணவிகள் தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தியதோடு, பிரியாவிடை பெற்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த மார்ச் 1ம் தேதி பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு அரசு பொதுத்தேர்வு தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள புதுக்கோட்டை, அறந்தாங்கி, இலுப்பூர் ஆகிய 3 கல்வி மாவட்டங்களை சேர்ந்த 21 ஆயிரத்து 96 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு இருந்தனர். இதில் 283 பேர் தனித்தேர்வர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக புதுக்கோட்டை மாவட்டத்தில் 81 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில் நேற்று பிளஸ் 2 மாணவ, மாணவிகளுக்கு தேர்வு நிறைவடைந்தது.
மாணவ, மாணவிகள் சிலர் வண்ண சாயப்பொடியை ஒருவருக்கொருவர் தூவி சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்கள். மாணவிகள் அவர்களுக்குள் கை குலுக்கி, ஆரத்தழுவி, செல்பி எடுத்தும் பிரியாவிடை பெற்றனர்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.