தமிழ்நாடு முழுவதும் பிறப்பு-இறப்பு சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் பெறும் வசதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறிய தாவது:-
தற்போது சென்னை மாநகராட்சி பகுதியில் பிறப்பு-இறப்பு சான்றிதழ்கள் இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வசதி உள்ளது. இதேபோன்று இனி தமிழ்நாடு முழுவதும் ஒரே இணையதளம் மூலம் பிறப்பு-இறப்பு சான்றிதழ்களை பதிவு செய்யும் மென் பொருளை மக்கள் பயன்பாட்டுக்காக இன்று தொடங்கி வைத்திருக்கிறேன்.
இதன்மூலம் மாநிலத்தில் எந்த பகுதியில் வசிக்கு மக்களும் பிறப்பு-இறப்பு சான்றிதழை எந்த ஒரு இ-சேவை மையத்தில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கம்ப்யூட்டர் மூலம் வீட்டில் இருந்தோ, அல்லது கம்ப்யூட்டர் சென்டருக்கு சென்றோ பதிவிறக்கம் செய்யலாம். இதன்மூலம் எந்த சிரமமும் இன்றி பிறப்பு-இறப்பு சான்றிதழ்களை பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.
பிறப்பு-இறப்பு சான்றிதழ் பெறுவது குறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
அரசு ஆஸ்பத்திரிகளில் குழந்தை பிறந்தாலோ, அல்லது குழந்தை பிறந்ததை பதிவு செய்தாலோ 21 நாட்களுக்குள் பிறப்பு சான்றிதழை பெறலாம். கர்ப்பிணி பெண்கள் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும்போது அவர்களுக்கு ஒரு பதிவு எண் கொடுக்கப்படும்.
அதில் அவர்களுடைய வீட்டு விலாசம் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இருக்கும். தனியார் ஆஸ்பத்திரியில் குழந்தை பெற்றுக் கொண்டாலும் இந்த பதிவு எண் மூலம் ஆன்லைனில் பதிவு செய்து குழந்தை பிறப்பு சான்றிதழை பெறலாம்.
தமிழகத்தில் தற்போது 99.5 சதவீத குழந்தைகள் மருத்துவமனைகளில் தான் பிறக்கின்றன. 23 சதவீதம் பேர் மருத்துவமனைகளில் இறக்கிறார்கள். இதற்கான பிறப்பு-இறப்பு சான்றிதழ்களை அந்தந்த ஆஸ்பத்திரி மூலம் பதிவு செய்து ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யலாம்.
தற்போது தமிழ்நாடு முழுவதும் ஆன்லைன் மூலம் பிறப்பு-இறப்பு சான்றிதழ் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே குறிப்பிட்ட ஆன்லைன் மூலம் முறைப்படி பதிவு செய்து இந்த சான்றிதழ்களை எந்த செலவும் இல்லாமல் எளிதாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.