தமிழக காவல்துறையில், உதவி காவல் ஆய்வாளர் பணி தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியாகியுள்ளது. மொத்தம் 969 காலிப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமம் இந்த தேர்வினை நடத்துகிறது.
பணிகள் மற்றும் காலிப்பணியிடங்கள்:
சப் - இன்ஸ்பெக்டர் ஆப் போலீஸ் (TK) - 660
சப் - இன்ஸ்பெக்டர் ஆப் போலீஸ் (AR) - 276
சப் - இன்ஸ்பெக்டர் ஆப் போலீஸ் (TSP) - 33
முக்கிய தேதிகள்:
அறிவிப்பு வெளியான தேதி: 08.03.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 20.03.2019
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.04.2019
எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும்.
சம்பளம்:
தேர்வு செய்யப்பட்டு பணியில் சேர்வோருக்கு ரூ.36,900 முதல் ரூ.1,16,600 வரை மாதம் சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வுக்கட்டணம்:
பொது பிரிவினர் மற்றும் துறை சார்ந்தவர்கள்: ரூ.1,000
மற்ற அனைத்து பிரிவினர்கள் : ரூ.500
தேர்வுக்கட்டணம் செலுத்தும் முறை:
ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் இரண்டிலுமே தேர்வுக்கட்டணத்தை செலுத்தலாம்.
ஆன்லைனில் இன்டர்நெட் பேங்கிங் அல்லது டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் தேர்வுக்கட்டணத்தை செலுத்தலாம். ஆஃப்லைனில் எஸ்.பி.ஐ சல்லான் மூலமாக தேர்வுக்கட்டணத்தை செலுத்தும் வசதியும் உண்டு.
வயது வரம்பு:
குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சம் 28 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். பிரிவு வாரியாக வயது வரம்பில் மாற்றங்கள் உண்டு.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த தேர்விற்கு தகுதியானவர்கள்.
குறிப்பு:
1. 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாமல் அதற்கு மேற்பட்ட கல்வித்தகுதியினைப் பெற்றிருந்தால் விண்ணப்பிக்க தகுதியற்றவர்களாவர்.
2. 10 / 12 ஆம் வகுப்பில் தமிழை ஒரு பாடமாக எடுத்து படிக்காமல் தேர்ச்சி பெற்றவர்கள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் இரண்டாம் நிலைத் தேர்வை, பணியில் சேர்ந்த நாளிலிருந்து இரண்டாண்டிற்குள் தேர்ச்சி பெற வேண்டும்.
3. 10+2+3 என்ற முறையில் பயிலாமல், திறந்த நிலை பல்கலை கழகங்களில் பயின்று பட்டம் பெற்றவர்கள் இதற்கு தகுதியற்றவர்களாவர்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.
ஆன்லைனில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமத்தின், www.tnusrbonline.org - என்ற இணையத்தளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.
மேலும், இது குறித்த முழு தகவல்களைப் பெற,
http://www.tnusrbonline.org/pdfs/SI_TKARTSP_2019_Notification.pdf - என்ற இணையத்தளத்தில் சென்று பார்க்கலாம்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.