புதுக்கோட்டை மாவட்டத்தில் மார்ச் 9-ல் பொது விநியோகத் திட்ட குறைகேட்பு



புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டங்களிலும் தலா ஒவ்வொரு கிராமங்களில் வரும் மார்ச் 9ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு பொது விநியோகத் திட்டக் குறைகேட்பு முகாம் நடைபெறும்.

புதுக்கோட்டை வட்டத்தில் திருக்கோகர்ணம், ஆவுடையார்கோவில் வட்டத்தில் வேள்வரை, மணமேல்குடி வட்டத்தில் அழகன்வல்,  ஆலங்குடி வட்டத்தில் கோவிலூர், திருமயம் வட்டத்தில் மிரட்டுநிலை, குளத்தூர் வட்டத்தில் ஒடுக்கம்பட்டி, இலுப்பூர் வட்டத்தில் பரம்பூர், கந்தர்வக்கோட்டை வட்டத்தில் நொடியூர், அறந்தாங்கி வட்டத்தில் ஓமக்கன்வயல்,  பொன்னராவதி வட்டத்தில் ஆவாம்பட்டி, கறம்பக்குடி வட்டத்தில் ஒடப்பவிடுதி, விராலிமலை வட்டத்தில் விட்டமாபட்டி ஆகிய கிராமங்களில் இந்த முகாம் நடைபெறுகிறது.

Post a Comment

0 Comments