புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் ஆர்.புதுப்பட்டினம் கிராமத்தில் முஸ்லிம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் கட்டிடம் மிகவும் பழுதடைந்து இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. எனவே மாணவர்கள், ஆசிரியர்கள் மேல் விழுந்து உயிர் இழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது.
இதன் காரணமாக கட்டிடத்தினை இடித்து அப்புறப்படுத்த கோரி 2015-ஆம் ஆண்டு முதல் பல முறை மாவட்ட கல்வி அலுவலர், பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் எழுத்து மூலம் மனுவாக நேரடியாகவும், பதிவு அஞ்சல் மூலம் அனுப்பியும் இதுவரை நடவடிக்கை எடுக்காத அனைத்து துறை அதிகாரிகளை கண்டித்தும், பழுதடைந்த பள்ளி கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த கோரியும் நாளை 02/03/2019 சனிக்கிழமை காலை 11.00 மணியளவில் மீமிசல் செக் போஸ்ட் (கிழக்கு கடற்கரைச் சாலையில்) அருகில் த.மு.மு.க சார்பாக மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடைபெறுவதாக இருந்தது. இன்று 01/03/2019 வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமுமுக சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியீடு:
M. ஜியாவுல் ஹக்,
தமுமுக & மமக ஒன்றிய துணை தலைவர்,
ஆவுடையார் கோவில்,
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்.
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.