நாடாளுமன்றத் தேர்தலில் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத் திமுக கூட்டணிக்கு ஆதரவு!!



ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்தின் அமைப்புச் செயற்குழுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10-03-2019) காலை 10.30 மணியளவில் திருச்சி KMS ஹாலில் அமைப்புத் தலைவர் PM.அல்தாஃபி தலைமையில் நடைபெற்றது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கூட்டணிக்கு ஆதரவளிப்பது மற்றும் அமைப்பின் எதிர்கால திட்டங்கள் குறித்தும் இச்செயற்குழுவில் ஆலோசிக்கப்பட்டது.

இதில், நாட்டின் நலன் மற்றும் சமூக நலன் கருதியும் மதவெறி சக்திகளுக்கு எதிராக தற்போது களமாடும் திராவிட முன்னேற்ற கழக தலைமையிலான (திமுக) கூட்டணிக்கு எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஆதரவளிக்க வேண்டும் என்று ஏக மனதாக முடிவு செய்யப்பட்டது.

இதனையடுத்து இந்த YMJ அமைப்புச் செயற்குழுவில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
  1. பாபர் மஸ்ஜித் வழக்கில் மத்தியஸ்தர் முடிவு செய்ய குழு அமைத்துள்ள உச்சநீதிமன்ற உத்தரவை இச்செயற்குழு கண்டிப்பதோடு, இந்திய மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 20% இருந்தும் நாடாளுமன்ற சட்டமன்றங்களில் உரிய அரசியல் பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டு வருவதை சரி செய்ய இந்திய தேர்தல் முறையை விகிதாச்சார ‎பிரதிநிதித்துவ அடிப்படையில் மாற்ற அரசியல் ‎சாசன சட்டத்திருத்தம் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.
  2. அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோரது பிறந்த நாளை முன்னிட்டு கருணை அடிப்படையில் பல சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் விடுவிக்கப்படும் சிறைவாசிகள் பட்டியலில் இஸ்லாமிய சிறைவாசிகள் இடம்பெறாமல் இருப்பது வேதனையளிப்பதாக உள்ளது. எனவே கருணை அடிப்படையில் இஸ்லாமிய சிறைவாசிகளையும் விடுவித்து நீதி செலுத்து வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
  3. எம்.ஜி.ஆர் ஆகியோரது பிறந்த நாளை முன்னிட்டு கருணை அடிப்படையில் பல சிறைவாசிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் விடுவிக்கப்படும் சிறைவாசிகள் பட்டியலில் இஸ்லாமிய சிறைவாசிகள் இடம்பெறாமல் இருப்பது வேதனையளிப்பதாக உள்ளது. எனவே கருணை அடிப்படையில் இஸ்லாமிய சிறைவாசிகளையும் விடுவித்து நீதி செலுத்து வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Post a Comment

0 Comments