கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை ~ அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை



ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது.

அதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது : மாணவர்கள் குறைவாக உள்ள அரசுப்பள்ளிகளை மூடும் எண்ணம் தமிழக அரசுக்கு இல்லை என கூறினார்.

இது வேண்டுமென்றே, திட்டமிட்டு பரப்பப்படுவதாக தெரிவித்தார். மேலும் கோடை விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது, அப்படி நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

கடந்த ஆண்டு 1.17 லட்சம் பேர் தமிழ்நாட்டிலிருந்து நீட் தேர்வுக்கு விண்ணப்பித்ததாகவும், இந்த முறை 1.50 லட்சம் பேருக்கு மேல் விண்ணப்பிக்கலாம் என எதிர்பார்ப்பதாகவும், அதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Post a Comment

0 Comments