வாட்ஸ்ஆப்-இன் எச்சரிக்கை!! உடனே உங்க வாட்ஸப் பாருங்க!!!



பிளே ஸ்டோர் அல்லாது அதிகாரப்பூர்வமற்ற வகையில் வாட்ஸ் ஆப் செயலியை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி வந்தவர்களின் வாட்ஸ் ஆப் கணக்கை முடக்குவதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் எச்சரித்துள்ளது. 

வாட்ஸ் ஆப்  இயங்க மொபைல் எண் அடிப்படையாக இருக்கின்றது. இதன்மூலம் நாம் வாட்ஸ் ஆப் பயன்படுத்தி வருகின்றோம்.

பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் ஆப் செயலி  கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். 

இது இல்லாமல்  சிலர் மூன்றாம் நிலை செயலிகளை வைத்து வாட்ஸ் ஆப்பை பயன்படுத்தி வருகின்றனர். அவை,

GB Whatsapp

YoYo Whatsapp

FM Whatsapp

Fouad Whatsapp

என்று பல வாட்ஸப்புகள் இணையத்தில் இலவசமாக கிடைக்கின்றது.  இது போன்ற செயலிகளை பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது உங்கள்  தகவல்கள் திருட்டு போகவும் வாய்ப்புள்ளது. எனவே 3ம் நபர் வாட்ஸப்புகளை பயன்படுத்திவந்தவர்களின் கணக்குகளை வாட்ஸப் நிறுவனம் முடக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments