ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணியில் முஸ்லிம் லீக்கும், அதிமுக கூட்டணியில் பாஜகவும் நேருக்கு நேராகப் போட்டியிடுகின்றன.
ராமநாதபுரம் தொகுதியில் ராமநாதபுரம், முதுகுளத்தூர், திருவாடானை, பரமக்குடி (தனி), புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 15,52,761 வாக்காளர்கள் உள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் மட்டும் 11,22,589 வாக்காளர்கள் உள்ளனர்.
1952-ம் ஆண்டு முதல் இதுவரை ராமநாதபுரம் தொகுதியில் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் 6 முறை, திமுக 3 முறை, அதிமுக 4 முறை, த.மா.கா. 1 முறையும், பார்வர்டு பிளாக் 1 முறை, சுயேட்சை 1 முறை வெற்றி பெற்றுள்ளன. 2009-ல் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட ஜெ.கே. ரித்தீஷ் வெற்றிபெற்றார். 2014-ல் தனியாக களம் கண்ட அதிமுக வேட்பாளர் அன்வர் ராஜா 4 லட்சம் வாக்குகள் பெற்று அமோக வெற்றிபெற்றார். இம்முறை யாருக்கு? 2014-ல் பாஜக கூட்டணியில் இருந்த மதிமுக, கொங்கு மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி திமுகவுடன் இணைந்துள்ளன.
அதுபோல தனியாகப் போட்டியிட்ட இடதுசாரிகளும் திமுக பக்கம் உள்ளன. இந்த முறை முஸ்லிம் லீக் - பாஜக இடையே நேரடிப்போட்டி ஏற்பட்டுள்ளது. முஸ்லிம் லீக் வேட்பாளராக நவாஸ்கனி போட்டியிடுகிறார். பாஜக சார்பில் அக்கட்சி துணைச் செயலாளர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். ஆகவே திமுக, அதிமுக ஆகிய இரு அணிகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் வேட்பாளர்களின் பிரச்சாரம், பண பலம், சிறுபான்மை சமூக வாக்குகள் உள்ளிட்ட பல காரணிகள் வெற்றி வேட்பாளரை தீர்மானிக்கும் என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் Facebook சமூக வலைதள பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்...
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.