எஸ்டிபிஐ கட்சிக்கு மத்திய சென்னை தொகுதி ஒதுக்கீடு: டிடிவி தினகரன்



வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அமமுக-வுடன் எஸ்டிபிஐ கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது.

அமமுக கூட்டணியில் ஏற்கனவே எஸ்டிபிஐ கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அது எந்த தொகுதி என்பது பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என அப்போது இரு கட்சித் தலைவர்களும் தெரிவித்தனர்.

இந்நிலையில் அமமுக கூட்டணியில் எஸ்டிபிஐ கட்சிக்கு மத்திய சென்னை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

மத்திய சென்னை தொகுதி என்பது இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் தொகுதியாகும். இதனால் தான் எஸ்டிபிஐ கட்சிக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதிக்குட்பட்ட சேப்பாக்கம், ஆயிரம் விளக்கு, துறைமுகம் என பல பகுதிகளில் இஸ்லாமியர்கள் கணிசமாக உள்ளனர்.

மத்திய சென்னை திமுகவின் கோட்டையாக இருந்தாலும், ஒரு பக்கம் தயாநிதி மாறன், ஒரு பக்கம் எஸ்டிபிஐ, அதிமுக சார்பில் கோகுல இந்திரா போன்றோர் களமிறங்க உள்ளதாக தகவல் கசிகின்ற நிலையில், கமலின் மையமும் களமிறங்கினால் அங்கு பலமுனை போட்டி ஏற்படும்.

மத்திய சென்னையை கைப்பற்றப்போவது யார் ? என்ற கேள்விக்கு மே 23 தேதி தான் விடையளிக்க வேண்டும்.

Post a Comment

0 Comments