பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கலின் கடைசி நாளான (மார்ச்.26), அமமுக-எஸ்.டி.பி.ஐ. கூட்டணியின் மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதி எஸ்.டி.பி.ஐ கட்சியின் வேட்பாளர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி அன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
இந்நிகழ்ச்சியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக், மாநில செயலாளர்கள் அமீர் ஹம்சா, ரத்தினம், மாநில பொருளாளர் வி.எம்.அபுதாஹிர், மாநில வர்த்தகர் அணி தலைவர் முகைதீன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் முகமது பாரூக், காசிநாததுரை, ஏ.கே.அப்துல் கரீம், வழ.ராஜா முகமது, சுல்ஃபிகர் அலி, கூட்டணி கட்சித் தலைவர்கள், ஆதரவு அமைப்பின் தலைவர்கள், மகளிர் அணி நிர்வாகிகள், மாவட்ட மற்றும் பகுதி நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் தொண்டர்களுடன் பேரணியாக வந்த வேட்பாளர் தெஹ்லான் பாகவி, சென்னை செனாய் நகரில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி ஸ்ரீதரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கலின் போது எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், அமமுக இளைஞர் பாசறை மாநில செயலாளர் கே.சி.விஜய், அமமுக தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வி.சுகுமார்பாபு, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன், SDPI கட்சி வழக்கறிஞர் அணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் கோபாலப்பட்டினம் நெய்னா முகம்மது ஆகியோர் உடன் இருந்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் Facebook சமூக வலைதள பக்கத்தை லைக் செய்து கொள்ளுங்கள்...
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.