மணமேல்குடி அருகே மது பதுக்கி விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். மணமேல்குடி மற்றும் ஜெகதாப்பட்டிணம் ஆகிய பகுதிகளில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெறுவதாக வரப்பெற்ற புகார் தொடர்பாக, நேற்று மேற்கண்ட இடத்தில் புதுக்கோட்டை கோட்டக்கலால் அலுவலர் சாலை தவவளன் மற்றும் கலால் தனி வருவாய் ஆய்வாளர் முத்து மற்றும் ராஜா ஆகியோருடன் திடீர் தணிக்கை செய்யப்பட்டது.
அப்போது ஜெகதாப்பட்டிணம், சிங்கவனம், மணமேல்குடி ஆகிய இடங்களில் உள்ள மதுபான கடைகளுக்கு அருகே கள்ளத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக பில்லுவலசு கிராமத்தை சேர்ந்த கருப்பையா (37), தோப்புவயலை சேர்ந்த சிவக்குமார் (40) மற்றும் மணமேல்குடியை சேர்ந்த ராஜா (39) ஆகியோரை பிடித்து அவர்களிடமிருந்து 116 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டு, ஆலங்குடி மதுவிலக்கு பிரிவு போலீசில் ஒப்படைக்கப்பட்டனர். அதனடிப்படையில் மதுவிலக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.