புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 1,270 மில்லி மீட்டர் மழைப்பதிவு மீமிசலில் -24.20 மில்லி மீட்டர் மழைப்பதிவு




புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 1,270 மில்லி மீட்டர் அளவு மழை பதிவாகியிருந்தது.

பலத்த மழை

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினமும் பகலில் வெயில் உக்கிரம் வழக்கம் போல இருந்தது. இதற்கிடையில் மாலை நேரத்தில் வானிலையில் சீதோஷ்ண நிலை மாற்றம் ஏற்பட்டு மழை பெய்ய தொடங்கியது.

புதுக்கோட்டையில் இந்த மழையானது மாலை 5.30 மணிக்கு மேல் பெய்ய தொடங்கியது. இந்த மழை இடைவிடாமல் இரவு 9 மணி வரை ஒரே சீராக பலத்த மழையாக பெய்தது. அதன்பின் மழை தூறியபடி இருந்தது. இதேபோல மாவட்டத்தில் திருமயம், குடுமியான்மலை, ஆலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த மழையினால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மழை அளவு விவரம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை 6.30 மணி நேர நிலவரப்படி முடிவடைந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 1,270.60 மில்லி மீட்டர் அளவு மழைப்பதிவாகியிருந்தது. இதில் அதிகபட்சமாக புதுக்கோட்டையில் 138 மில்லி மீட்டர் அளவு மழைப்பதிவானது. மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-ஆதனக்கோட்டை-41, பெருங்களூர்-79, ஆலங்குடி-60, கந்தர்வகோட்டை-24, கறம்பக்குடி-1, மழையூர்-32.40, கீழணை-68.40, திருமயம்-116, அரிமளம்-72.40, அறந்தாங்கி-65, ஆயிங்குடி-24.40, நாகுடி-50.40, மீமிசல்-24.20, ஆவுடையார்கோவில்-24.80, மணமேல்குடி-4, இலுப்பூர்-31, குடுமியான்மலை-109, அன்னவாசல்-81.20, விராலிமலை-12, உடையாளிப்பட்டி-47, கீரனூர்-48.40, பொன்னமராவதி-8, காரையூர்-109.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments