தொண்டி அருகே உள்ள நம்புதாளை அரசு துவக்கப்பள்ளியில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி ஆசிரியர்கள் சார்பில் கிழக்கு கடற்கரை சாலையில் டிஜிட்டல் பேனர் வைத்துள்ளனர்.
பள்ளியின் மீது அக்கரை செலுத்தும் ஆசிரியர்களை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். அரசு பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைந்து வருவதால் பல இடங்களில் அரசு பள்ளிகள் மூடுவிழா கண்டு வருகிறது.
இந்நிலையில் திருவாடானை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நம்புதாளை அரசு துவக்கப்பள்ளியில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க பெற்றோர்களிடம் வழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக டிஜிட்டல் பேனர் பல்வேறு இடங்களில் வைத்துள்ளனர். அதில் பள்ளியின் சிறப்பு அம்சம், வசதி உள்ளிட்டவை அச்சிடப்பட்டுள்ளது.
இது குறித்து தலைமை ஆசிரியர் ஜான்தாமஸிடம் கேட்டபோது, கடந்த கல்வி ஆண்டில் மாவட்டத்தில் அதிகமாள குழந்தைகளை சேர்த்த பெருமை இந்த பள்ளிக்கு கிடைத்தது. இதையடுத்து வரும் கல்வி ஆண்டில் இன்னும் அதிமான மாணவர்களை சோக்க முடிவெடுத்து ஒவ்வொரு வீடாக சென்று குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி துண்டு பிரசுரம் கொடுத்தோம்.
தற்போது பெற்றோர்களுக்கு தெரியும் விதமாக எங்கள் பள்ளியின் சிறப்பு அம்சங்கள் குறித்து பேனர் வைத்துள்ளோம். தனியார் பள்ளியில் சேர்ப்பதை தவிர்த்து அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்றார்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.