தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 11 ஆயிரத்து 670 மாணவர்கள், 11 ஆயிரத்து 601 மாணவிகள் என மொத்தம் 23 ஆயிரத்து 271 பேர் தேர்வு எழுதினர். இந்த தேர்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.
இதில் 11 ஆயிரத்து 103 மாணவர்கள், 11 ஆயிரத்து 357 மாணவிகள் என மொத்தம் 22 ஆயிரத்து 460 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 96.51 சதவீதம் ஆகும். இது கடந்த ஆண்டைவிட 0.41 சதவீதம் அதிகம் ஆகும்.
அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 790 மாணவர்கள், 3 ஆயிரத்து 706 மாணவிகள் என மொத்தம் 7 ஆயிரத்து 496 பேர் தேர்வு எழுதினர். இதில் 3 ஆயிரத்து 649 மாணவர்கள் உள்பட 7 ஆயிரத்து 296 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 97.33 சதவீதம் ஆகும்.
மீமிசல் சங்கீத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி கோபாலப்பட்டினம் மதினா 2-வது தெருவைச் சேர்ந்த ஹாஜி மஸ்தான் அவர்களின் மகள் ஹஸ்னத் ஹாஜிரா பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 482/500 மதிப்பெண்களை பள்ளியளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். இப்பள்ளி 100% தேர்ச்சி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 163 பள்ளிகள் மட்டுமே 100 சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளன.
மதிப்பெண் விபரம்:
முதல் மதிப்பெண் - 482/500 (கோபாலபட்டினத்தை சேர்ந்த மாணவி)
இரண்டாவது மதிப்பெண் - 474/500
மூன்றாவது மதிப்பெண் - 472/500

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.