பெண்ணின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவித்தல் குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஸ்கேன் சென்டர்களும், மருத்துவர்களும் சட்டத்தை மதித்து நடத்தல் அவசியம் என மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் டாக்டர் ம. சந்திரசேகரன் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவித்தல் தடைச் சட்டம் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கில் அவர் மேலும் பேசியது:
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆயிரம் ஆண்களுக்கு 951 பெண்கள் உள்ளனர். இந்திய சராசரியைவிட இது அதிகம். என்றாலும் சட்டத்தை மதித்து மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து டாக்டர்களும், ஸ்கேன் சென்டர் நிர்வாகிகளும் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவிக்கக் கூடாது. முறையாக பதிவேடுகளை பராமரித்து வைக்க வேண்டும். முறைகேடுகள் கண்டறியப்பட்டால் ஸ்கேன் சென்டர்களை மூட உத்தரவிடப்படும் என்றார் ம. சந்திரசேகரன்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ஏ.எல். மீனாட்சி சுந்தரம், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பரணிதரன், காசநோய் துணை இயக்குநர் மு பெரியசாமி, இந்திய மருத்துவக் கழகத் தலைவர் டாக்டர் சலீம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.