புதுக்கோட்டை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவை நிறுவனத்தில் மருத்துவ உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்



புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகிற ஜூன் 30ம் தேதி 108 ஆம்புலன்ஸ் சேவை நிறுவனத்துக்கு மருத்துவ உதவியாளர் மற்றும் தொலைபேசி அலுவலர் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்தார்.


இதுதொடர்பாக கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் அவசர கால உதவியாளர் மற்றும் தொலைபேசி அலுவலர் (இஆர்ஓ) பணி இடங்களுக்கான நேர்முகத் தேர்வு முகாம் வருகிற 30ம் தேதி (ஞாயிறு) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மன்னர் கல்லூரி பழைய கலையரங்கத்தில் நடைபெற உள்ளது. இதில் தேர்வு பெற்றவர்கள் தமிழகத்தின் எந்த பகுதியிலும் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணி நியமன ஆணை அன்றே வழங்கப்படும். மருத்துவ உதவியாளர் பணியிடத்துக்கு ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

பிஎஸ்சி நர்சிங், விலங்கியல், தாவரவியல், நுண் உயிரியல் படித்திருக்க வேண்டும். அல்லது ஜிஎன்எம், ஏஎன்எம், டிஎன்ஏ, டிஎம்எல்டி, டிபார்ம் உள்ளிட்ட படிப்புகளில் ஏதாவது ஒன்றினை முடித்திருக்க வேண்டும். 20 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

மருத்துவ உதவி பயிற்சியாளர்களுக்கு இஎம்டி டெக்னீசியன் மற்றும் டெக்னீசியன் பயிற்சிக்கான தகுதிகள் ஓராண்டு சான்றிதழ் படிப்பை அரசு மருத்துவக் கல்லூரியில் படித்திருக்க வேண்டும். 19 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இவர்களுக்கு எழுத்து தேர்வு, மருத்துவ நேர்முகம் ,உடற்கூறியல், முதலுதவி பணி தொடர்பாகவும் மற்றும் மனிதவளத் துறையின் நேர்முக தேர்வுகளும் நடத்தப்படும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 50 நாட்கள் வகுப்பறை பயிற்சி, மருத்துவமனை, ஆம்புலன்ஸ் சார்ந்த நடைமுறை பயிற்சிகள் அளிக்கப்படும். தகுதியும் விருப்பமும் உடையவர்கள் கலந்து கொள்ளலாம்.தொலைபேசி அலுவலர் (இஆர்ஓ) பணியிடத்துக்கு ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

அடிப்படை தட்டச்சுப் பயிற்சி அனுபவம் தேவை. 19 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளரை 7397724844 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Post a Comment

0 Comments