கட்டுமாவடியில் வெளிமாநில லாட்டரி விற்ற 2 பேர் கைதுபுதுக்கோட்டை மாவட்டம்,  மணமேல்குடி அருகே உள்ள கட்டுமாவடியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்ற 2 பேரை மணமேல்குடி காவல் துறையினர் செவ்வாய்க் கிழமை கைது செய்தனர்.

கட்டுமாவடி  கடைவீதியில்  கேரள மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக மணமேல்குடி காவல் ஆய்வாளர் ஜெயசித்ரா தலைமையிலான போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸார் அப்பகுதிக்குச் சென்று சோதனையில் ஈடுபட்டபோது, அதே பகுதியைச் சேர்ந்த  நாகராஜ், முகம்மது யாசின் உள்ளிட்ட இருவரும் கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்றது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகளைப் பறிமுதல் செய்தனர்.

Post a Comment

0 Comments