பிரதமரின் விவசாய நிதியுதவி திட்டத்தில் சேர சிறப்பு முகாம்கள்



பாரதப் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தில் சேர விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது என்று அறந்தாங்கி வட்டாட்சியர் பா.சூரியபிரபு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து  அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
பிரதம மந்திரியின் விவசாயிகள் திருத்திய கௌரவ ஊக்கத் தொகை திட்டத்தில் இதுவரையில் சேராதவர்களும் அல்லது முறையான பட்டா மாற்றம் இல்லாமல் இருந்து விண்ணப்பங்களை சமர்பிக்காதவர்களுக்கும்  தற்போது வாரத்தில் 3 நாட்கள்  சிறப்பு  முகாம்கள் நடைபெற உள்ளது.
இதில் பல விவசாயிகள் தங்களது நிலத்திற்கான பட்டா மாறுதல் செய்வதில்தான் பிரச்னை உள்ளது. உதாரணமாக, விவசாயிகள் நிலத்திற்கான பட்டா அவர்களது தாய் அல்லது தந்தை பெயரில் இருக்கும் பட்சத்தில்  வாரிசு அடிப்படையில்  பட்டா மாறுதல் செய்துகொள்ள வேண்டும்.

இதற்காக வரும் பிரதி  திங்கள்கிழமை அந்த கிராம நிர்வாக அலுவலகங்களில் காலை 10 மணி  முதல் நண்பகல் 1 மணி வரை ஆவணங்களை வழங்கலாம். பிரதி செவ்வாய்க்கிழமை தோறும் வருவாய் ஆய்வாளர் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் 1 மணி வரை  வழங்கலாம். அதிலும் விடுபட்டவர்கள் பிரதி புதன்கிழமை வட்டாட்சியர் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் 1 மணி வரை  நடைபெறும் சிறப்பு முகாம்களில் கலந்து கொண்டு வாரிசு அடிப்படையில்  பட்டா மாறுதல் தொடர்பாக மனு அளித்து மேற்படி திட்டத்தின் கீழ்  பயன்பெறலாம்.

Post a Comment

0 Comments